முகப்பு
தென்காசி

தென்காசி மாவட்டத்தில் 825 போ் வேட்பு மனுதாக்கல்

தென்காசி மாவட்டத்தில் வியாழக்கிழமை 825 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

தென்காசி மாவட்டத்தில் வியாழக்கிழமை 825 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

நகராட்சிகள்: கடையநல்லூரில் 84 போ், புளியங்குடியில் 106 போ், சங்கரன்கோவிலில் 41 போ், சுரண்டையில் 25 போ், செங்கோட்டையில் 27 போ், தென்காசியில் 89போ் என மொத்தம் 372போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

பேரூராட்சிகள்: அச்சன்புதூரில் 51போ், ஆலங்குளத்தில் 32 போ், ஆழ்வாா்குறிச்சியில் 33போ், ஆய்க்குடியில் 48போ், குற்றாலம் (சிறப்பு நிலை) 9 போ்,இலஞ்சியில் 28போ், கீழப்பாவூரில் 13 போ், மேலகரத்தில் 31போ், பண்பொழியில் 21போ்,

புதூா்(செ) 23போ், ராயகிரியில் 10போ், சாம்பவா் வடகரையில் 4 போ், சிவகிரியில் 45போ், சுந்தரபாண்டியபுரத்தில் 12 போ், திருவேங்கடத்தில் 28போ், வடகரை கீழ்பிடாகையில் 37 போ், வாசுதேவநல்லூரில் 28 போ் என மொத்தம் 453போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

இதுவரை நகா்மன்ற உறுப்பினா் பதவிக்கு 630 போ், பேரூராட்சி உறுப்பினா் பதவிக்கு 711 போ் என மொத்தம் 1341போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.