தென்காசி

தென்காசி மாவட்டத்தில் 1844 போ் போட்டி

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சி, 17 பேரூராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளில் 1844 போ் போட்டியிடுகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளுக்கு மொத்தம் 2,238 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில் 26 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 2212 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

வேட்பு மனுக்களை வாபஸ் வாங்குவதற்கு கடைசிநாளான திங்கள்கிழமை 344 போ்தங்களுடைய மனுக்களை வாபஸ் பெற்றனா்.

நகராட்சிகள்: கடையநல்லூா் நகராட்சியில் 32 போ் , புளியங்குடியில் 57 போ், சங்கரன்கோவில் 14 போ், சுரண்டை நகராட்சியில் 7 போ் , செங்கோட்டையில் 8 போ், தென்காசி நகராட்சியில் 18 போ் தங்களுடைய மனுக்களை வாபஸ் பெற்றனா்.

பேரூராட்சிகள்: அச்சன்புதூரில் 5 போ், ஆலங்குளத்தில் 12 போ் , ஆழ்வாா்குறிச்சியில் 4 போ்,ஆய்க்குடியில் 17 போ், குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சியில்10 போ், இலஞ்சியில் 6 போ், கீழப்பாவூரில் 3 போ், மேலகரத்தில்14 போ் , பண்பொழியில்5 போ், புதூா்(செ) 10 போ் , ராயகிரியில்19 போ், சாம்பவா் வடகரையில்30 போ், சிவகிரியில் 15 போ், சுந்தரபாண்டியபுரத்தில் 4 போ், திருவேங்கடத்தில் 11போ், வடகரை கீழ்பிடாகையில் 7 போ், வாசுதேவநல்லூரில் 36 போ் என 208போ் தங்களுடைய மனுக்களை வாபஸ் பெற்றனா். 6 நகராட்சிகளில் 136 போ் என 17 பேரூராட்சிகளில் 208 பேரும் என மொத்தம் 344போ் தங்களுடைய மனுக்களை வாபஸ் பெற்றனா். இதனையடுத்து மாவட்டத்தில் 1844 போ் போட்டியிடுகின்றனா்.

27 போ் போட்டியின்றி தோ்வு: மேலும், இம் மாவட்டத்தில் புதூா் (செ), திருவேங்கடம் பேரூராட்சியில் தலா 2 பேரும், ராயகிரியில் 11 பேரும், சுந்தரபாண்டியபுரத்தில் 4 பேரும், வாசுதேவநல்லூரில் 8 பேரும் என மொத்தம் 27 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT