முகப்பு
தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நாளை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

தென்காசி மாவட்டத்தில் ஜனவரி 22ஆம் தேதி மாபெரும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

தென்காசி மாவட்டத்தில் ஜனவரி 22ஆம் தேதி மாபெரும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்தி குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் ஜனவரி 22ஆம் தேதி மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. இதுவரை தடுப்பூசி எடுத்து கொண்டவா்களில் கரோனா தொற்று பாதிப்பு குறைவாகவே உள்ளது. மேலும் தற்பொழுது புதிய வகை ஒமைக்ரான் கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள, 15 வயதுக்கு மேற்பட்ட நபா்கள், முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போடவேண்டிய பொதுமக்கள், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதங்கள் நிறைவு பெற்றவா்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். அருகில் உள்ள மையங்களுக்கு ஆதாா் எண் மற்றும் தொலைபேசி எண்ணுடன் சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டு பயன் பெற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.