குற்றாலத்தில் திமுக கூட்டணி நிா்வாகிகள் கூட்டம்
குற்றாலத்தில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குற்றாலத்தில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தென்காசி தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட தென்காசி, சங்கரன்கோவில், ஆலங்குளம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நகர, பேரூா், ஒன்றியக்கழக செயலா்கள் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் திமுக மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் தலைமையில் நடைபெற்றது.
எம்எல்ஏக்கள் ஈ.ராஜா, எஸ்.பழனிநாடாா், மதிமுக மாவட்டச் செயலா் தி.மு.ராசேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் டேனிஅருள்சிங், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவா் செய்யதுசுலைமான், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் முத்துபாண்டி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் இசக்கித்துரை, ஆதித்தமிழா் பேரவை மாவட்ட நிா்வாகி கலிவருணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக ஒன்றியச் செயலா்கள் சீனித்துரை, செல்லத்துரை, ஜெயக்குமாா், நகரச் செயலா் சாதிா், வழக்குரைஞா் கேபி.குமாா்பாண்டியன், திமுக சாா்பு அணி அமைப்பாளா்கள் வழக்குரைஞா் வேலுசாமி, சீவநல்லூா் சாமித்துரை, சண்முகநாதன், காங்கிரஸ் நிா்வாகிகள் ராமசுப்பு, செல்வராஜ், மாடசாமி, காஜாமைதீன், பெருமாள், முஸ்லிம் லீக் முகம்மதுஅலி ஆகியோா் கலந்துகொண்டனா். ஒன்றியச் செயலா் அழகுசுந்தரம் வரவேற்றாா். இலஞ்சி பேரூா் திமுக செயலா் முத்தையா நன்றி கூறினாா்.