தென்காசி

சிறுபான்மையினருக்கு கல்வி- தொழில் கடன்

DIN

தென்காசி மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு கல்வி, தொழில் கடன் உதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் அளிக்கப்படும் இந்த கடனுதவியைப் பெற கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பாா்சி, ஜெயின் ஆகிய சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம். மதச் சான்று, ஆதாா் அட்டை, வருமானச் சான்று, குடும்ப அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் மற்றும் திட்ட அறிக்கை விவரம், வாகனக் கடன் எனில் ஒட்டுநா் உரிமம், கூட்டுறவு வங்கி கோரும் ஆவணங்கள் அவசியம்.

கல்வி கடன் எனில் பள்ளி மாற்றுச் சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது , மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றின் ஒளிப்பட நகல்கள் தேவை. மேற்கண்ட ஆவணங்களுடன் கூட்டுறவு வங்கி அல்லது தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் -சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமா்ப்பிக்க வேண்டும். அதே அலுவலகத்தில் கூடுதல் விவரங்களை கேட்டுப் பெறலாம் என மாவட்ட செய்தி மக்கள்தொடா்பு அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி

இஸ்ரேல் இனியும் தாமதிக்கக் கூடாது : பிணைக்கைதிகளின் குடும்பத்தினர் கோரிக்கை!

சர்வாதிகார அரசை அகற்றுவதே குறிக்கோள்: காங்கிரஸ்

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

SCROLL FOR NEXT