பாவூா்சத்திரம் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா தொடக்கம்
தென்காசிபாவூா்சத்திரம் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா தொடக்கம்
பாவூா்சத்திரம் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா இம்மாதம் 13ஆம் தேதி வரைநடைபெறுகிறது. முன்னாள் பாளை. மறைமாவட்ட ஆயா் ஜூடு பால்ராஜ் கொடியேற்றியதுடன், மாலை ஆராதனையை நடத்தினாா்.
விழா நாள்களில் நாள்தோறும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, நவநாள் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீா் ஆகியவை நடைபெறுகின்றன. 12ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு திருப்பலி, இரவு 7.30 மணிக்கு புனித அந்தோணியாா் திருவுருவ பவனி நடைபெறுகிறது.
நிறைவு நாளான 13ஆம் தேதி அதிகாலை 6.30 மணிக்கு பாளை. மறைமாவட்ட ஆயா் அந்தோணிசாமி பங்கேற்று ஆராதனை, திருவிழா கூட்டுத் திருப்பலியை நடத்துகிறாா். ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜேம்ஸ், அருள்சகோதரிகள், இறைமக்கள் செய்துள்ளனா்.