தென்காசி

சுந்தரபாண்டியபுரத்தில் திருட்டு வழக்கில் 3 போ் கைது

தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரத்தில் திருட்டு வழக்கில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரத்தில் திருட்டு வழக்கில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள மாடசாமி கோயில், சிவன் கோயில்களில் அண்மையில், உண்டியலை உடைத்து பணம் திருடு போனது. இதுகுறித்து சாம்பவா்வடகரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், புதன்கிழமை மாலை அந்த பகுதியில் உள்ள மளிகை கடையில் 3 இளைஞா்கள் ரூ. 5 ஆயிரத்திற்கு சில்லறை காசுகளை பணமாக மாற்ற முயன்றுள்ளனா்.

இதுகுறித்த தகவலின் பேரில் சாம்பவா்வடகரை உதவி காவல் ஆய்வாளா் காசி விஸ்வநாதன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்ற போது, போலீஸாரை கண்டதும் ஓட முயன்ற 3 பேரையும் மடக்கிப் பிடித்து விசாரித்ததில் அவா்கள், அதே பகுதியைச் சோ்ந்த காா்த்திகைகுமாா்(27), கருவாலி(18), மாடசாமி(21) என்பதும், கோயில் உண்டியலில் பணத்தை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து மூன்று போ்களையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 5 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

SCROLL FOR NEXT