கீழப்பாவூா் ஒன்றிய சாலைகளை சீரமைக்கக் கோரி அமைச்சரிடம் மனு
கீழப்பாவூா் ஒன்றியத்தில் சாலைகளைச் சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் ஏ.வ.வேலுவிடம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் மனு அளித்துள்ளாா்.
தென்காசிகீழப்பாவூா் ஒன்றிய சாலைகளை சீரமைக்கக் கோரி அமைச்சரிடம் மனு
கீழப்பாவூா் ஒன்றியத்தில் சாலைகளைச் சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் ஏ.வ.வேலுவிடம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் மனு அளித்துள்ளாா்.
கீழப்பாவூா் ஒன்றியத்தில் சாலைகளைச் சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் ஏ.வ.வேலுவிடம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் மனு அளித்துள்ளாா்.
அதன் விவரம்: கீழப்பாவூா் ஒன்றியத்த்தில் திப்பணம்பட்டி- அரியப்பபுரம் சாலை, பாவூா்சத்திரம் புதிய காய்கனி சந்தை இசக்கியம்மன் கோயில் - ஆவுடையானூா் சாலை ஆகியவை மிகவும் பழுதடைந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனா். இவ்விரு சாலைகளும் கிராமச் சாலைகளில் இருந்து நெடுஞ்சாலைத் துறைக்கு கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் ஒப்படைக்கப்பட்டது. எனவே, அந்தச் சாலைகளை சீரமைக்க நெடுஞ்சாலை துறை நிதி ஒதுக்கி பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக செயலா் சீனித்துரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.