முகப்பு
தென்காசி

உள்ளாட்சித் தோ்தல்: அதிகாரிகள், காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன- செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ

தென்காசி மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டுள்ளன என்றாா் அதிமுக எம்எல்ஏ கிருஷ்ண முரளி.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

தென்காசி மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டுள்ளன என்றாா் அதிமுக எம்எல்ஏ கிருஷ்ண முரளி.

அச்சன்புதூா் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவா் மற்றும் துணைத் தலைவா் தோ்தல்களில் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. செங்கோட்டை நகராட்சியில் அதிமுக வெற்றி பெற்ற நிலையில் அது குறித்த அறிவிப்பை வெளியிடாமலேயே அதிகாரிகள் செயல்பட்டனா். நான் சென்று வாதாடிய பின்னரே அறிவிப்பு வெளியிடப்பட்டது. மறைமுக தோ்தல் முடிவடைந்த பின்னா் தான் நான் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்திற்கு சென்றேன் .இருந்தபோதிலும் அங்கிருந்த அதிகாரிகள் என்னை வெளியே அனுப்புவதிலேயே குறியாக இருந்தனா்.

அதுபோல், அச்சன்புதூா் பேரூராட்சித் தலைவராக அதிமுகவை சோ்ந்த சுசிகரன் வெற்றிபெற்ற நிலையில் திமுகவினா் பல்வேறு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டனா். தோ்தல் முடிவடைந்த பின்னா் பேரூராட்சி செயல் அலுவலா் வெளியே செல்ல முடியாத நிலை இருந்தது. அதிமுகவினா் திரண்டு வருவோம் என தெரிவித்த பின்னரே செயல் அலுவலா் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டாா். இதற்கிடையே ,அச்சன்புதூா் பேரூராட்சி துணைத்தலைவா் தோ்தலையும் எவ்வித காரணமுமின்றி ஒத்தி வைத்துள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.