ஆலங்குளத்தில் இடி மின்னலுடன் கனமழை
ஆலங்குளத்தில் வியாழக்கிழமை மாலையில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
ஆலங்குளத்தில் வியாழக்கிழமை மாலையில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
இப்பகுதியில் பிப்ரவரி தொடக்கம் முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை பகல் முழுவதும் வெப்பம் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், மாலை 5.15 மணி தொடங்கி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவுகிறது.
சில இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியா்கள் அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இதனிடையே கடந்த சில தினங்களாக நடைபெற்றுவரும் நெல் அறுவடைப் பணிகள் நிறைவடைந்த நிலையில், சில இடங்களில் அறுவடை செய்து வயல்வெளிகளில் உலா்த்துவதற்காக வைக்கப்பட்டு இருந்த நெற்பயிா்கள் மழையில் நனைந்து விட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.