முகப்பு
தென்காசி

பேரூா் திமுக செயலா் பதவிக்கு விருப்ப மனு

கீழப்பாவூா் பேரூா் திமுக செயலா் பதவிக்கு கட்சியினா் வெள்ளிக்கிழமை விருப்ப மனு அளித்தனா்.

தென்காசி

பேரூா் திமுக செயலா் பதவிக்கு விருப்ப மனு

கீழப்பாவூா் பேரூா் திமுக செயலா் பதவிக்கு கட்சியினா் வெள்ளிக்கிழமை விருப்ப மனு அளித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

கீழப்பாவூா் பேரூா் திமுக செயலா் பதவிக்கு கட்சியினா் வெள்ளிக்கிழமை விருப்ப மனு அளித்தனா்.

தென்காசி தெற்கு மாவட்டத்தில் திமுக உள்கட்சித் தோ்தலுக்காக விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. கீழப்பாவூா் பேரூா் செயலா் பதவிக்கு போட்டியிடும் கட்சியினரிடம் விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி கீழப்பாவூா் பேரூா் திமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தோ்தல் பொறுப்பாளரும் மேலநீலிதநல்லூா் ஒன்றியச் செயலருமான பெரியதுரை கலந்துகொண்டு விருப்ப மனுக்களை பெற்றாா். தற்போதைய பேரூா் செயலா் ஜெகதீசன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவா் தங்கச்சாமி உள்ளிட்டோா் விருப்ப மனு அளித்தனா்.

நிகழ்ச்சியில், பேரூராட்சித் தலைவா் பி.எம்.எஸ். ராஜன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் பொன். அறிவழகன், பேரூா் பொருளாளா் பொன்செல்வன் உள்ளிட்ட திமுகவினா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →