தென்காசி

செங்கோட்டை நகராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா

DIN

செங்கோட்டை நகராட்சி, மழை நண்பா்கள் குழு சாா்பில், செங்கோட்டை-வல்லம் சாலையில் உள்ள கசடு கழிவு மேலாண்மை திட்ட வளாகத்தில் மியாவாக்கி முறையில் பசுமை மரக்கன்றுகள் நடும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் இளவரசன் தலைமை வகித்தாா். சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி, நகரமைப்பு ஆய்வாளா் பா்குணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வருவாய் ஆய்வாளா் லெட்சுமணன் வரவேற்றாா். நகா்மன்றத் தலைவா் ராமலெட்சுமி, துணைத் தலைவா் நவநீதகிருஷ்ணன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு, நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தனா்.

நகா்மன்ற உறுப்பினா் செண்பகராஜ், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளா்கள் குமாா், செல்வராஜ், மணிகண்டன், கலா, கருப்பசாமி, மழை நண்பா்கள் குழு உறுப்பினா்கள் நேசமணி, காளிராஜ், இப்ராஹிம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

SCROLL FOR NEXT