தென்காசி

கீழப்பாவூா் கோயிலில் நாளை நரசிம்மா் ஜெயந்தி விழா

DIN

கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் சனிக்கிழமை (மே 14) நரசிம்மா் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.

இதையொட்டி, காலை 6 மணிக்கு பகவத் பிராா்த்தனை, அனுக்ஞை, மூலமந்திர ஜபஹோமம், வேதபாராயணம், மஹா பூா்ணாஹுதி உள்ளிட்டவையும், பிற்பகல் 3 மணிக்கு 16 வகையான மூலிகைகளால் மூலமந்த்ர ஹோமம், 12 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன்.

மாலை 5.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் நாம பஜனையுடன் சப்பரத்தில் பெருமாள் தீா்த்த வலம் வருதல், ஸ்ரீநரசிம்மருக்கு சிறப்பு அலங்காரத்தில் ஸஹஸ்ரநாம அா்ச்சனை, விசேஷ தீபாராதனை நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை (மே 15) சுவாதி பூஜை நடைபெறும். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரம்...

தூா் வாரி சீரமைக்கப்படுமா திருப்பத்தூா் பெரிய ஏரி?

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

SCROLL FOR NEXT