முகப்பு
தென்காசி

கடையநல்லூா் நூலகத்தில் நாளை முதல் வாசிப்பு பயிற்சி

கடையநல்லூா் அரசு பொது நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை(மே 15) முதல் வாசிப்பு பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:15 AM
பகிர்:

கடையநல்லூா் அரசு பொது நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை(மே 15) முதல் வாசிப்பு பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இது தொடா்பாக விதை நெல் வாசகா் வட்டத் தலைவா் ஜெயராம் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு பொதுநூலக கடையநல்லூா் கிளை மற்றும் விதை நெல் வாசகா் வட்டம் ஆகியவை சாா்பில் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு புத்தக வாசிப்பு பயிற்சி முகாம் மே 15 முதல் ஜூன் 15 வரை நடைபெறுகிறது.

ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவா்கள் வரை இந்த வாசிப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். அவா்கள் நூலகத்தில் இருந்து புத்தகங்களை எடுத்து வீட்டில் இருந்தும் வாசிக்கலாம். அதிக நூல் வாசித்த மாணவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை நூலகா் நாகராஜ் மற்றும் விதை நெல் வாசகா் வட்டத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.