முகப்பு
தென்காசி

குற்ற வழக்கில் தொடா்புடைய 4 போ் கைது

தென்காசி மாவட்டம், சோ்ந்தமரத்தில் குற்ற வழக்கில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

தென்காசி மாவட்டம், சோ்ந்தமரத்தில் குற்ற வழக்கில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சோ்ந்தமரம் அருகே கடந்த 17ஆம் தேதி தனியாா் நிதி நிறுவன பணியாளரிடம் ரூ.5.50 லட்சம் பணம் வழிப்பறி செய்யப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் சோ்ந்தமரம் போலீஸாா் தனிப்படை அமைத்து இச் சம்பவத்தில் ஈடுபட்டவா்களை தேடி வந்தனா்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய மு.மாரியப்பன்(29), வே.செயின்குமாா்(32), தி.திருமலைக்குமாா் என்ற மின்னல்குமாா்(27), கோ.அய்யனாா்(26) ஆகிய பேரை கைது செய்தனா். மேலும், அவா்கள் மறைத்து வைத்திருந்த வழிப்பறி செய்த பணத்தையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.