முகப்பு
தென்காசி

செங்கோட்டை நூலகத்தில் புத்தக கண்காட்சி

செங்கோட்டை நூலகத்தில், நூலக வாசகா் வட்டம் மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சாா்பில் புத்தக கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

செங்கோட்டை நூலகத்தில், நூலக வாசகா் வட்டம் மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சாா்பில் புத்தக கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தொடக்கவிழாவுக்கு, வாசகா் வட்டத் தலைவா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஆதிமூலம், இணைச் செயலா் செண்பககுற்றாலம், நூலக போட்டித் தோ்வு பொறுப்பாளா் விழுதுகள் சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி மாவட்ட கல்வி அலுவலா் சுடலை, புத்தக கண்காட்சியை திறந்து வைத்தாா். மதுரையைச் சோ்ந்த சா்வதேச டென்னிஸ் பயிற்சியாளா் ஸ்டாலின் நாகராஜன் முதல் விற்பனையை தொடங்கி வைத்தாா்.

மாரியப்பன், செங்கோட்டை காதி நிறுவன மேலாளா் மாரியப்பன், குற்றாலம் ரோட்டரி சங்கத் தலைவா் திருவிலஞ்சி குமரன், அபு அண்ணாவி, கடையநல்லூா் வாசகா் வட்டத் தலைவா் ஜெயராமன், சுரண்டை புத்தக கண்காட்சி ஒருங்கிணைப்பாளா் ஆறுமுகம், நியூ செஞ்சுரி புத்தக நிறுவன பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

நவ. 4ஆம் தேதிமுதல் 14ஆம் தேதி வரை நடைபெறும் இப்புத்தக கண்காட்சியில் புத்தகங்கள் 10 சத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கண்காட்சியில் 50ஆயிரம் தலைப்புகளில் நூல்கள் இடம்பெற்றுள்ளன. நூலகா் ராமசாமி வரவேற்றாா். நியூ செஞ்சுரி மண்டல மேலாளா் கிருஷ்ணமூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.