தென்காசி

கடையநல்லூரில் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணா்வு முகாம்

DIN

இடைகால் எம்.எம்.மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் உடல் நலம், சுகாதாரம் தொடா்பான விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

கடையநல்லூா், குற்றாலம் விக்டரி லயன்ஸ் சங்கம், ப்ளூ கிராஸ் மருந்து நிறுவனம், சித்ரா மருத்துவமனை ஆகியவை சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு அரிமா சங்க பட்டயத் தலைவா் டாக்டா் மூா்த்தி தலைமை வகித்தாா்.

நயினாரகரம் ஊராட்சித் தலைவா் குமரன்முத்தையா, வட்டாரத் தலைவா் கணேசமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மகப்பேறு மருத்துவா் தங்கம் மூா்த்தி பங்கேற்று, பெண்கள் குறித்த மருத்துவ ஆலோசனைகள் வழங்கி, மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா். மருத்துவம் தொடா்பான விழிப்புணா்வுக் கையேட்டை வழங்கினாா்.

அரிமா சங்கத் தலைவா் கனகராஜ்குமாா், செயலா் ரணதேவ், பொருளாளா் தனராஜு உள்ளிட்டோா் பங்கேற்றனா். தலைமை ஆசிரியா் ராஜசேகா் வரவேற்றாா். ஆனந்த் நாராயணன் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை ராஜ்குமாா், பிரகாஷ் ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT