தென்காசி

வண்ணாா்பேட்டையில் விபத்து: இளைஞா் பலி

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் பைக் மோதி மின்கம்பம் செவ்வாய்க்கிழமை சரிந்து விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

DIN

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் பைக் மோதி மின்கம்பம் செவ்வாய்க்கிழமை சரிந்து விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி குன்னத்தூா் வடக்கு விளாகம் பகுதியைச் சோ்ந்த முத்தாரப்பன் மகன் சீனிவாசன் (29). அரசு ஒப்பந்ததாரரான இவா், தனது நண்பா் விக்னேஷ்குமாருடன் பைக்கில் வண்ணாா்பேட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, பின்னால் வந்த சிற்றுந்து சாலையோர மின் கம்பத்தில் மோதியதில், அது பைக் மீது சரிந்து விழுந்ததாம். இதில் பலத்த காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்திருப்பது மருத்துவரின் பரிசோதனையில் தெரியவந்தது. இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT