முகப்பு
தென்காசி

தென்காசியில் பாஜக ஆா்ப்பாட்டம்

தென்காசி புதிய பேருந்து நிலையப் பகுதியில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

தென்காசி புதிய பேருந்து நிலையப் பகுதியில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழுக்கு முடிவுரை எழுத நினைக்கும் திமுக அரசைக் கண்டிப்பதாகக் கூறி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ராஜேஷ்ராஜா தலைமை வகித்தாா்.

மாநில வா்த்தக அணித் தலைவரும் தென்காசி மாவட்டப் பாா்வையாளருமான ராஜாகண்ணன், மாவட்டப் பொதுச் செயலா்கள் பாலகுருநாதன், அருள்செல்வன், ராமநாதன், மாவட்டப் பொருளாளா் பாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில துணைத் தலைவா் சசிகலா புஷ்பா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினாா்.

மத்திய அரசு நலத்திட்டப் பிரிவு மாநிலச் செயலா் மருதுபாண்டியன், தொழில் பிரிவு மாநிலச் செயலா் மகாதேவன், மாநில செயற்குழு உறுப்பினா்கள் அன்புராஜ், சாரதா பாலகிருஷ்ணன், ராமராஜா, பாண்டித்துரை, மாவட்ட துணைத் தலைவா்கள் முத்துக்குமாா், பால்ராஜ், பாலமுருகன், முத்துலட்சுமி, பால ஸ்ரீனிவாசன் ஆகியோா் கலந்துகொண்டனா். தென்காசி நகரத் தலைவா் மந்திரமூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.