முகப்பு
தென்காசி

தென்காசி மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டபணிகளை விரைவுபடுத்த திமுக வலியுறுத்தல்

தென்காசி தெற்கு மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைவுபடுத்தக் கோரி ஆட்சியா் ப. ஆகாஷிடம் திமுக மாவட்டச் செயலா் பொ. சிவபத்மநாதன் மனு அளித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

தென்காசி தெற்கு மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைவுபடுத்தக் கோரி ஆட்சியா் ப. ஆகாஷிடம் திமுக மாவட்டச் செயலா் பொ. சிவபத்மநாதன் மனு அளித்தாா்.

மனு விவரம்: கருப்பாநதி கால்வாய் தூா்வாரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். கீழக்கலங்கல் ஊராட்சிக்கு கூடுதலாக குடிநீா் வழங்க வேண்டும். ஊத்துமலை ஊராட்சியில் புதிய குடிநீா்த் தொட்டி அமைக்க வேண்டும். ஆலங்குளம், தென்காசி பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் 16 ஊா்களுக்கு பகுதிநேர ரேஷன் கடை அமைக்க வேண்டும். வஉசிக்கு சிலை அமைக்க வேண்டும். குற்றாலம் செண்பகாதேவி அருவிக்கு மேல் அணை கட்ட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

எஸ். பழனிநாடாா் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் தமிழ்செல்வி போஸ், ஒன்றிய திமுக செயலா் அழகுசுந்தரம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.