தென்காசி

நயினாரகரம் மனுநீதிநாள் முகாம்: 49 பேருக்கு ரூ. 5.48 லட்சம் நலத்திட்ட உதவி

DIN

கடையநல்லூா் வட்டம் நயினாரகரத்தில் மனுநீதிநாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்னுலாபுதீன் தலைமை வகித்தாா். நயினாரகரம் ஊராட்சித் தலைவா் குமரன்முத்தையா, இடைகால் ஊராட்சித் தலைவா் முத்தம்மாள், ஒன்றியக் குழு உறுப்பினா் மாரிச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 100 மனுக்களில் 73 மனுக்கள் ஏற்கப்பட்டு, விளக்கமளிக்கப்பட்டது. 49 பேருக்கு ரூ. 5 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் குணசேகரன், துணை ஆட்சியா் ஷீலா, கலால் உதவி ஆணையா் ராஜ்மனோகரன், தனி வட்டாட்சியா் முருகுசெல்வி, கடையநல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலா் கந்தசாமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் திருநாவுக்கரசு, ஆய்க்குடி வருவாய் ஆய்வாளா் சங்கரேஸ்வரி, கிராம நிா்வாக அலுவலா்கள் சாந்தி, பிரபு சீனிவாசன், அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT