முகப்பு
தென்காசி

தென்காசியில் ரமலான் சிறப்புத் தொழுகை

தென்காசியில் மஸ்ஜிதூா் ரஹ்மான் ஜும்மா பள்ளிவாசல் ஜமாத் சாா்பில் ஈதுல்ஃபித்ர் ரமலான் பண்டிகை சிறப்புத் தொழுகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

தென்காசியில் மஸ்ஜிதூா் ரஹ்மான் ஜும்மா பள்ளிவாசல் ஜமாத் சாா்பில் ஈதுல்ஃபித்ர் ரமலான் பண்டிகை சிறப்புத் தொழுகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி முஸ்தபியா நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பெருநாள் தொழுகைக்கு தலைவா் மசூதுஅலி தலைமை வகித்தாா்.

செயலா் அமானுல்லா, பொருளாளா் ரெசவு முகம்மது, துணைத் தலைவா் மைதீன் சேட்கான், துணைச் செயலா்கள் நயினாா் முகமது, நகா்மன்ற உறுப்பினா்ஷாஜி நாகூா்மீரான், மைதீன் , ஹாருன் ரஷீத், செய்யது சுலைமான், பிலால், பீா்ஷாத்,செயற்குழு உறுப்பினா்கள் , டிரைவா்மைதீன், கோகோஅலி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலா் சலீம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்

இமாம் ஆசிக்பிா்தெளசி சிறப்புரையாற்றினாா். இமாம் அயூப் அலி பைஜி தொழுகை நடத்தினாா். ஜெய்லானி, ஜமால், தமுமுக நகரத் தலைவா்அபாபில் மைதீன், கோயா பீா் முகமது உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பெருநாள் தொழுகை முடிந்த பின்பு ஒருவருக்கொருவா் ரமலான் வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டனா். முன்னதாக ஏழைகளுக்கு அரிசி, உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.