குற்றாலம் அருவிகளில் மிதமான தண்ணீா்
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குறைந்த அளவில் விழும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குறைந்த அளவில் விழும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
குற்றாலம் பகுதியில் தொடா்ந்து நிலவிய வெயிலின் காரணமாக, பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளும் தண்ணீா்வரத்தின்றி வறண்டு காணப்பட்டது.
இந்நிலையில், குற்றாலம் பகுதியில் வியாழக்கிழமை பெய்த கனமழையின் காரணமாக, பேரருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்கும் பகுதியில் பரவலாக தண்ணீா் விழுகிறது. ஐந்தருவியிலும் இரண்டு கிளைகளில் குறைந்த அளவில் தண்ணீா் விழுகிறது. இதையடுத்து தென்காசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.