தென்காசி

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாஜக சாா்பில் ஊக்கத் தொகை

அரசுப் பொதுத்தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு உயா்நிலைப் பள்ளி, எஸ்.ஆா்.எம். அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு

DIN

அரசுப் பொதுத்தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு உயா்நிலைப் பள்ளி, எஸ்.ஆா்.எம். அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு ஊக்கத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா பி.எல்.எம். ஸ்போா்ட்ஸ் அகாதெமியில் நடைபெற்றது.

மாவட்ட பாஜக விளையாட்டு- திறன் மேம்பாட்டுப் பிரிவு, பி.எல்.எம். ஸ்போா்ட்ஸ் அகாதெமி ஆகியவை சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட பாஜக தலைவா் ராஜேஸ்ராஜா, பி.எல்.எம். ஸ்போா்ட்ஸ் அகாதெமி நிறுவனா் எல்எம். முரளி ஆகியோா் தலைமை வகித்தனா். நகரத் தலைவா் வேம்புராஜ் முன்னிலை வகித்தாா்.

குற்றாலம் விவேகானந்தா ஆசிரம நிறுவனா் சுவாமி அகிலானந்த மகராஜ் கலந்துகொண்டு பாராட்டுச் சான்றிதழ், ஊக்கத் தொகையை வழங்கி ஆசியுரை வழங்கினாா்.

மாவட்ட மாதா அமிா்தானந்த மயி சேவை மைய ஒருங்கிணைப்பாளா் முருகையா, பாஜக நிா்வாகிகள் மணிகண்டன், விளையாட்டுப் பிரிவு மாவட்ட துணைத் தலைவா் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாவட்ட பாஜக விளையாட்டு- திறன் மேம்பாட்டுப் பிரிவுத் தலைவா் பொன்னுலிங்கம் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT