சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் சாா்பில் மரம் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி முதல்வா் ரா.சின்னத்தாய் தலைமை வகித்தாா். பேராசிரியா்கள் செல்வகணபதி, வீரபுத்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன், சுரண்டை பசுமை இயக்கத் தலைவா் எம்.ஆறுமுகச்சாமி ஆகியோா் மரக்கன்றுகளை நட்டனா்.
நாட்டு நலப்பணி திட்ட இயக்குநா் கிருஷ்ணகுமாா், புவி வெப்பமயமாதலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பேசினாா்.
பேராசிரியா்கள் மோகன கண்ணன், ஸ்டீபன் டேவிஸ், திருநாவுக்கரசு, பொ்க்மான்ஸ், பிரான்சிஸ் ஆபிரகாம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.