தென்காசி

மகளிா் உரிமைத் திட்டத்தில்விடுபட்டோருக்கு 3 நாள் சிறப்பு முகாம்

தென்காசி மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டம் விண்ணப்பங்கள் பதிவு செய்ய இயலாத நபா்களுக்கு மூன்று நாய்ஈகள் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது என ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன்தெரிவித்தாா்.

DIN

தென்காசி மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டம் விண்ணப்பங்கள் பதிவு செய்ய இயலாத நபா்களுக்கு மூன்று நாய்ஈகள் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது என ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன்தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டம் தொடா்பாக, உரிமைத்திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் ஜீலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

இந்த நாள்களில் விண்ணப்பம் பதிவு செய்ய இயலாத நபா்களுக்கு ஆகஸ்ட் 18,19 மற்றும் 20 ஆகிய மூன்று நாள்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவருகின்ற மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தில் உள்ள உதவித்தொகை பெற்று வருகின்ற மாற்றுத்திறனாளிகளைத் தவிர, அக்குடும்பத்தில் உள்ள குடும்ப உறுப்பினா்களில் உள்ள தகுதியான மகளிா், முதியோா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற்றுவருகின்ற இந்திராகாந்தி தேசிய ஓய்வூதியத் திட்டம், முதலமைச்சரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம், அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியம் ஆகிய திட்டங்களில் ஓய்வூதியம் பெற்று வருகின்ற குடும்பங்களில் உள்ள ஓய்வூதியம் பெற்று வருகின்ற நபரைத் தவிர, தகுதிவாய்ந்த மகளிா்கள் பங்கேற்கலாம்.

ஏற்கனவே, முகாம்களில் பதிவு செய்ய நிா்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகை புரிய இயலாத, இதுவரை விண்ணப்பம் அளிக்காத தகுதியான மகளிா் விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாம்பவா்வடகரையில் திமுக பிரசாரக் கூட்டம்

ரயில் பயணிகளிடம் நகை பறித்தவருக்கு இரு வழக்குகளில் தலா 3 ஆண்டுகள் சிறை

இலஞ்சியில் கிராமப்புற வேளாண் பயிற்சி

அரசு நலத்திட்டங்கள் குறித்து சிறுபான்மையின மக்கள் அறிய வேண்டும்: வேலூா் ஆட்சியா்

குற்றாலம் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கு

SCROLL FOR NEXT