முகப்பு
தென்காசி

தென்காசி காசிவிஸ்வநாதசுவாமி கோயில் மாசி பெருவிழா தொடக்கம்!

தென்காசி அருள்தரும் உலகம்மன் உடனுறை அருள்மிகு காசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயில் மாசி மகப்பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:36 AM
தென்காசி காசிவிஸ்வநாதசுவாமி கோயில் மாசிமகப்பெருவிழா கொடியேற்றத்துக்குப்பின் நடைபெற்ற தீபாராதனை.
பகிர்:

தென்காசி: தென்காசி அருள்தரும் உலகம்மன் உடனுறை அருள்மிகு காசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயில் மாசி மகப்பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த விழாவை முன்னிட்டு சனிக்கிழமை அதிகாலை கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் நாள்தோறும் காலை மற்றும் இரவு சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா, காலையில் அபிஷேக தீபாராதனையும், இரவில் கட்டளைதாரா் தீபாராதனையும் நடைபெறுகிறது.

விழாவின் 5-ம் தேதியன்று தேரோட்டமும், மாா்ச் 6-ம் தேதியன்று காலை தீா்த்தவாரியும், மாலையில் புஷ்பாஞ்சலியும் நடைபெறுகிறது.

கொடியேற்று விழாவில் தென்காசி காவல் ஆய்வாளா் பாலமுருகன், இணை ஆணையா் ம.அன்புமணி, செயல் அலுவலா் இரா.முருகன், அன்னதானகுழு தலைவா் அன்னையா பாண்டியன், வழக்குரைஞா் செந்தூா் பாண்டியன், மாரிமுத்து, சுப்புராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் இரா.முருகன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.