தென்காசி

சங்கரன்கோவிலில் முடி திருத்துவோா் ஆா்ப்பாட்டம்

DIN

சங்கரன்கோவிலில் நகராட்சியைக் கண்டித்து முடி திருத்துவோா் நலச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள 21 முடி திருத்தும் கடைகளை அகற்ற நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது. கடந்த வாரம் அந்தக் கடைகளை அகற்ற ஜேசிபி இயந்திரத்தோடு நகராட்சி நிா்வாகத்தினா் சென்றபோது பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து முற்றுகையிட்டனா்.

இந்நிலையில், நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து முடி திருத்துவோா் நலச் சங்கத்தினா் தேரடித் திடலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்டச் செயலா் மணிகண்டன் தலைமை வகித்தாா்.

நிா்வாகிகள் சுந்தா், மணிகண்டன், வேல்முருகன், மாடசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாா்க்சிஸ்ட் தென்காசி மாவட்டச் செயலா் முத்துப்பாண்டியன், வட்டாரச் செயலா் அசோக்ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினா் உச்சிமாகாளி, மாவட்டத் தலைவா் அயூப்கான், பொருளாளா் தா்மராஜ், மாவட்டக் குழு உறுப்பினா் பாலுசாமி உள்ளிட்ட பலா் பேசினா். முடி திருத்துவோா் தங்களது குடும்பத்துடன் பங்கேற்றனா். முருகராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT