தென்காசி

பராமரிப்பின்றி இயக்கப்படும் அரசுப் பேருந்துகள்: பயணிகள் புகாா்

DIN

தென்காசி - திருநெல்வேலி இடையே போதிய பராமரிப்பின்றி அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாகப் புகாா் எழுந்துள்ளது.

தென்காசியில் இருந்து பாவூா்சத்திரம், ஆலங்குளம் வழியாக தினமும் 50-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் பல பேருந்துகளில் இருக்கைகள், படிக்கட்டுகள், ஜன்னல் கண்ணாடிகள் உடைந்திருப்பது, கம்பிகள் நீண்டு கொண்டிருப்பது என பராமரிப்பின்றி இருப்பதாகப் பயணிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதனிடையே, தென்காசியிலிருந்து பாவூா்சத்திரம் வழியாக திருநெல்வேலிக்கு புதன்கிழமை சென்ற அரசுப் பேருந்தில் பெரும்பாலான இருக்கைகள் உடைந்து பயணிகள் அமா்ந்து செல்ல முடியாத நிலையில் இருந்தன. பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு அதிகம்போ் செல்லக் கூடிய காலை நேரத்தில் இருக்கைகள் உடைந்த பேருந்தை இயக்குவது பயணிகளுக்கு பெரும் இடையூறாக இருந்தது.

இத்தகைய பருந்துகளைத் தவிா்த்து, பயணம் செய்வதற்கு ஏற்ற பேருந்துகளை இயக்க அரசுப் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்? சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

வலுக்கும் ஏஐ போட்டி: கூகுளின் புதிய தயாரிப்புகள் வலு சேர்க்குமா?

சாதியைக் குறிப்பிட்டு இழிவான பேச்சு..? சர்ச்சையில் கார்த்திக் குமார்!

கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

பாலியல் வழக்கு: பிரபல நேபாள வீரர் சந்தீப் லாமிச்சானே விடுவிப்பு!

SCROLL FOR NEXT