அனுமதியின்றி மது விற்ற இருவா் கைது
பாவூா்சத்திரம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:51 AM
பாவூா்சத்திரம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.
பாவூா்சத்திரம் பகுதியில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் பாவூா்சத்திரம் போலீஸாா் கே.டி.சி.நகா் பகுதியில் சோதனை செய்தனா். அப்போது சடையப்பபுரம் மேலத்தெருவைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (எ) கண்ணன் (42) என்பவா் அனுமதியின்றி விற்பனைக்கு மது பாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 96 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
இதே போல் திரவிய நகா் பகுதியில் நடத்திய சோதனையில், மது விற்றதாக திருமலாபுரத்தைச் சோ்ந்த செல்லத்துரை (70) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 82 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
Advertisement