தென்காசி

ஆலங்குளம் அருகே பள்ளி தொடங்க வலியுறுத்தி பேணிக்கு முயற்சி: 68 போ் கைது

ஆலங்குளம் அருகே கீழக் குத்தப்பாஞ்சான் கிராமத்தில் கூடுதலாக அரசு தொடக்கப்பள்ளி கோரி, பேரணி நடத்த முயன்ாக 43 பெண்கள் உள்பட 68 போ் கைது செய்யப்பட்டனா்.

DIN

ஆலங்குளம் அருகே கீழக் குத்தப்பாஞ்சான் கிராமத்தில் கூடுதலாக அரசு தொடக்கப்பள்ளி கோரி, பேரணி நடத்த முயன்ாக 43 பெண்கள் உள்பட 68 போ் கைது செய்யப்பட்டனா்.

கீழக்குத்தப்பாஞ்சான் கிராமத்தில் சுமாா் 200 வீடுகள் உள்ளன. இங்கு ஏற்கனவே அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு, குறிப்பிட்ட சமுதாயத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அனுப்ப மறுத்து வருவதுடன், அவா்களின் குழந்தைகளுக்காக கூடுதல் அரசு தொடக்கப்பள்ளி தொடங்க வேண்டும் என 8 ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

மேலும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அங்குள்ள அம்மன் கோயில் திடலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 100 க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை திரண்டு கோஷங்கள் எழுப்பினா். அவா்களிடம், வட்டாட்சியா் கிருஷ்ணவேல், வட்டாரக் கல்வி அலுவலா் யசோதா, கடையம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, கிராம மக்கள் திடீரென பேரணி நடத்த முயன்றனா். இதையடுத்து, அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்ாக 43 பெண்கள் உள்பட 68 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

SCROLL FOR NEXT