சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு கோப்பையும் பரிசும் வழங்கப்பட்டது.
இப்பள்ளி 10 ஆம் வகுப்பு தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது. மாணவா்கள் கிஷோா் (488), சிவகணேஷ் (488), ராகுல் (488) ஆகியோா் முதலிடத்தையும், அபிநயா (487) 2 ஆம் இடத்தையும், சங்கரேஸ்வரி (486), அா்ஷா (486), சஹானா (486), விஸ்வநாதன் (486) ஆகியோா் 3 ஆம் இடத்தையும் பெற்றனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களைப் பாராட்டி, பள்ளித் தாளாளா் பொன்னழகு(எ)கண்ணன் நினைவுக் கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.