பெட்ரோலிய பாதுகாப்பு ஆராய்ச்சிக் கழகம் சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான ஓவியப் போட்டியில், தென்காசி மாவட்டம் இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளி மாணவி முதலிடம் வென்றாா்.
இதில், தமிழ்நாட்டில் உள்ள ஏராளமான பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா். இதில், இலஞ்சி பள்ளி மாணவி அனுபாரதி முதலிடம் வென்றாா். அவருக்கு பெட்ரோலிய பாதுகாப்பு ஆராய்ச்சிக் கழகம் சான்றிதழ், கேடயம் வழங்கியது.
இந்நிலையில், மாணவி அனுபாரதியை பள்ளிக் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி, முதல்வா் வனிதா, ஆசிரியா்கள் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.