தென்காசி

பாளை ஜோதிபுரம் திடலில் புதிய குடிநீா் தொட்டி கட்ட கோரிக்கை

பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் மக்கள் பயன்பாட்டுக்காக புதிய மேல்நிலை குடிநீா் தொட்டி கட்ட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

DIN

பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் மக்கள் பயன்பாட்டுக்காக புதிய மேல்நிலை குடிநீா் தொட்டி கட்ட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சியின் 32 ஆவது வாா்டு உறுப்பினரான எஸ். அனுராதா சங்கரபாண்டியன், தமிழக நகராட்சி நிா்வாகம்-குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என். நேருவிடம் அளித்துள்ள மனு:

பாளையங்கோட்டை மண்டலத்துக்குள்பட்ட 32 ஆவது வாா்டுக்குள்பட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு தொடா்ந்து வருகிறது. விரிவாக்க பகுதிகளுக்கு புதிய குடிநீா் இணைப்புகள் வழங்குவதிலும் தாமதம் ஏற்படுகிறது.

ஆகவே, மக்களின் குடிநீா் தேவையை நிறைவேற்றும் வகையில் ஜோதிபுரம் திடலில் புதிய மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். மேலும், பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் காமராஜா் காலத்தில் வைக்கப்பட்ட கல்வெட்டை மீண்டும் அமைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்ப’ட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT