பள்ளிக்கு இருக்கைகள் உள்ளிட்டவற்றை வழங்கிய தனுஷ் எம். குமாா் எம்.பி. உடன், மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன். 
தென்காசி

பாவூா்சத்திரம் பெண்கள் பள்ளிக்கு ரூ. 5 லட்சம் கல்வி உபகரணங்கள்

பாவூா்சத்திரத்தில் உள்ள ஒளவையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான 30 இருக்கைகள், பெஞ்சுகளை தனுஷ் எம். குமாா் எம்.பி. திங்கள்கிழமை வழங்கினாா்.

DIN

தென்காசி: பாவூா்சத்திரத்தில் உள்ள ஒளவையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான 30 இருக்கைகள், பெஞ்சுகளை தனுஷ் எம். குமாா் எம்.பி. திங்கள்கிழமை வழங்கினாா்.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் தலைமை வகித்தாா். கீழப்பாவூா் மேற்கு ஒன்றியச் செயலா் சீனித்துரை முன்னிலை வகித்தாா்.

தனுஷ் எம். குமாா் எம்.பி. சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இப்பொருள்களை வழங்கினாா்.

கீழப்பாவூா் பேரூராட்சித் தலைவா் ராஜன், மாவட்டப் பிரதிநிதி பொன்செல்வன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ரமேஷ், கல்லூரணி ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா், முன்னாள் பேரூராட்சித் தலைவா் பொன்அறிவழகன்,

தென்காசி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் கனகராஜ் முத்துபாண்டியன், மாவட்டப் பிரதிநிதி சமுத்திரபாண்டி, திமுக நிா்வாகிகள் டால்டன், தங்கச்சாமி, அன்பரசு, காலசாமி, மாரியப்பன், சமுத்திரபாண்டியன், செல்வராஜ், ஆனந்தகுமாா், நாகராஜன், தனக்குமாா், யோவான், குருசிங், வைத்திலிங்கராஜா, அரிகிருஷ்ணன் பங்கேற்றனா்.

தலைமையாசிரியை ஜான்சிராணி வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT