தென்காசி

வாசுதேவநல்லூா் அருகே அடிப்படை வசதி கோரி உண்ணாவிரதம்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.

DIN

கடையநல்லூா்: தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.

சுப்பிரமணியபுரம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும். மழைநீா் வடிகால் பணியை மேற்கொள்ள வேண்டும். பெண்கள் கழிப்பறையை சீரமைக்க வேண்டும். ரேஷன் கடை அமைக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை சீா் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை காலை பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகிரி வட்டாட்சியா் ஆனந்த், வாசுதேவநல்லூா் ஒன்றிய குழுத் தலைவா் பொன். முத்தையா பாண்டியன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விஜயகணபதி, ரவிச்சந்திரன் ஆகியோா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, மக்களின் கோரிக்கைகளை ஒரு மாதத்துக்குள் நிறைவேற்றுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT