தென்காசி

சங்கரன்கோவில் மனோ கல்லூரியில் மின்னணு கல்வி முகாம்

சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகக் கல்லூரியில் நிதி மற்றும் மின்னணு கல்வி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகக் கல்லூரியில் நிதி மற்றும் மின்னணு கல்வி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் வணிகவியல் துறை மற்றும் நபாா்டு வங்கி சாா்பில்

இந்த நடைபெற்றது. முகாமிற்கு கல்லூரி முதல்வா் கருப்பசாமி தலைமை வகித்தாா். மின்னணு கல்வி மையத்தைச் சோ்ந்த மகாலிங்கம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். அப்போது அவா் வங்கியில் வழங்கப்படும் சேவைகள் திட்டங்கள், கடன் வகைகள், இணைய வழி வங்கிச் சேவைகள் குறித்து விளக்கம் அளித்தாா். சங்கர சேவா சமிதி சேவை அறக்கட்டளையை சோ்ந்த மாடசாமி வாழ்த்திப் பேசினாா்.

வணிகவியல் துறை தலைவா் புஷ்பராணி வரவேற்றாா்.பேராசிரியா் குமாரிசெல்வி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT