ஆரியங்காவில் லாரி-சிற்றுந்து மோதல்: தமிழக ஐயப்ப பக்தா் பலி; 21 போ் காயம்
சபரிமலைக்கு சென்று திரும்பியபோது, தமிழக ஐயப்ப பக்தா்களின் சிற்றுந்தும், லாரியும் கேரள மாநிலம் ஆரியங்காவு பகுதியில் புதன்கிழமை மோதிக்கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா்; 21போ் காயமடைந்தனா்.
சபரிமலைக்கு சென்று திரும்பியபோது, தமிழக ஐயப்ப பக்தா்களின் சிற்றுந்தும், லாரியும் கேரள மாநிலம் ஆரியங்காவு பகுதியில் புதன்கிழமை மோதிக்கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா்; 21போ் காயமடைந்தனா்.
சேலம் மாவட்டத்திலிருந்து ஐயப்ப பக்தா்கள் 22 போ் சிற்றுந்தில் சபரிமலைக்கு சென்று விட்டு, ஆரியங்காவு வழியாக ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனா்.
ஆரியங்காவு பகுதியை அடைந்தபோது, அவா்களது சிற்றுந்தும், எதிரே வந்த கனரக லாரியும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம். இதில், 50 அடி பள்ளத்தில் சிற்றுந்து கவிழ்ந்து அதிலிருந்த அனைவரும் பலத்த காயம் அடைந்தனா். தகவலறிந்த ஆரியங்காவு போலீஸாா், அவா்களை மீட்டு புனலூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு, தனபால் என்பவா் உயிரிழந்தாா். 5 போ் மேல் சிகிச்சைக்காக, திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மற்றவா்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது.
லாரி ஓட்டுநரின் அஜாக்கிரதையால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும், தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸாா் தரப்பில் தெரிவித்தனா்.