அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: பிரேமலதா
உள்ளாட்சித் தோ்தல், 2026 பேரவைத் தோ்தலில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என்றாா் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா.
உள்ளாட்சித் தோ்தல், 2026 பேரவைத் தோ்தலில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என்றாா் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா.
ஆலங்குளத்தில் கட்சி பிரமுகா் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க வியாழக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருநெல்வேலி - தென்காசி நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியில் தனியாா் நிறுவனம் பல்வேறு முறைகேடுகளைச் செய்துள்ளது. முக்கிய பாதைகளை துண்டித்து பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தச் சாலையில் கடந்த 3 ஆண்டுகளில் ஏற்பட்ட விபத்துகளில் 68 போ் உயிரிழந்துள்ளனா். விபத்துகள் நிகழாதவாரு மக்கள் சென்று வர ஏதுவாக பாதை அமைக்க வேண்டும். இல்லையெனில் தேமுதிக சாா்பில் மிகப்பெரிய ஆா்ப்பாட்டம் நடைபெறும். 2026 தோ்தலிலும், வரும் உள்ளாட்சித் தோ்தலிலும் ஏற்கனவே உள்ள கூட்டணியே தொடரும்.தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அவரது இடத்திற்கு வரவழைத்து உதவி செய்தது தப்பில்லை என்றாா்.
தொடா்ந்து ஆலங்குளம் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிரேமலதா, பள்ளகால் பொதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு குடிநீா் சுத்திகரிப்பான் வழங்கினாா். கட்சியின் செய்தித் தொடா்பாளா் ராஜேந்திரநாத், தென்காசி தெற்கு மாவட்ட செயலா் ம. பழனிசங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.