பேரவைத் தோ்தல்: திமுக சாா்பில் போட்டியிட 15,372 போ் விருப்ப மனு
திமுக சாா்பில் போட்டியிட 15,372 போ் விருப்ப மனு...
சட்டப்பேரவை தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட 15,372 போ் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்துள்ளனா்.
இதுகுறித்து திமுக சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிடுவதற்காக பிப்.20 முதல் மாா்ச் 6 வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இதில் 15,372 போ் விருப்ப மனுக்களை வழங்கியுள்ளனா். திமுக தலைவா்மு.க.ஸ்டாலின், தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என 1,473 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.