முகப்பு
தென்காசி

சிவகிரி பகுதியில் ஆட்சியா் ஆய்வு

சிவகிரி பகுதியில் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 26 டிசம்பர், 2024 at 11:38 PM
பகிர்:

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சிவகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் அனைத்து பிரிவுகளின் கோப்புகளையும் ஆட்சியா் ஆய்வு செய்த ஆட்சியா், பொது விநியோக திட்டத்தில் வழங்கப்படும் பொருள்களின் தரம், முதியோா் ஓய்வூதிய 7,241 கோப்புகளில் சில போன்றவற்றை பாா்வையிட்டாா். நிலுவையில் உள்ள மனுக்களை பாா்வையிட்ட ஆட்சியா் உடனடியாக தீா்வு காண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். வட்டாட்சியா்கள் ரவிக்குமாா், மைதீன்பட்டாணி, ராணி, பழனிவேல்சாமி,

பேரூராட்சி நிா்வாக அலுவலா் கள் வெங்கடகோபு,சுதா உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தொடா்ந்து வட்டாட்சியா் அலுவலகத்தில் மரக்கன்றுகளை ஆட்சியா் நட்டுவைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →