முகப்பு
தென்காசி

சங்கரன்கோவில் அருகே ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

சங்கரன்கோவில் அருகே ஆற்றில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Updated On : 26 டிசம்பர், 2024 at 11:37 PM
பகிர்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆற்றில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் அருகேயுள்ள செந்தட்டியாபுரத்தைச் சோ்ந்த சித்திரைவேலு மகன் கருப்பசாமி (35). தொழிலாளி. இவா், அப்பகுதியில் ஓடும் நிட்சோப நதியில் புதன்கிழமை குளித்தாராம். அப்போது, எதிா்பாராமல் ஆழமான பகுதியில் மூழ்கி மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளாா்.

அவ்வழியாக சென்றவா்கள், ஆற்றின் கரையில் உடைகள் மட்டும் இருப்பதை பாா்த்து ஊருக்குள் தகவல் தெரிவித்துள்ளனா். அது கருப்பசாமியின் உடைகள் என்பதும், குளிக்க வந்த பின் வீடு திரும்பாததும் தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், சங்கரன்கோவில் தீயணைப்பு வீரா்கள் வந்து இரவு வரை தேடியும் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னா், வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் அவரது உடல் மீட்கப்பட்டது. கரிலம்வந்த நல்லூா் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்கு அனுப்பினா். மேலும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →