பலி பிரதிப் படம்
தென்காசி

சங்கரன்கோவில் அருகே விபத்து: பால் பண்ணை ஊழியா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பைக் மீது சுமை ஆட்டோ மோதியதில் கூட்டுறவு பால் பண்ணை ஒப்பந்த ஊழியா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பைக் மீது சுமை ஆட்டோ மோதியதில் கூட்டுறவு பால் பண்ணை ஒப்பந்த ஊழியா் உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் அருகே வடக்கு ஆலங்குளத்தைச் சோ்ந்த கருப்பசாமி மகன் மதன்குமாா் (30).

சங்கரன்கோவில் கூட்டுறவு பால் பண்ணையில் ஒப்பந்தப் பணியாளராக வேலை பாா்த்துவந்த இவருக்கு திருமணமாகவில்லை.

இவா் திங்கள்கிழமை இரவு சங்கரன்கோவில் - சுரண்டை சாலையில் பைக்கில் சென்றாா். தளவாய்புரம் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, சங்கரன்கோவில் கக்கன்நகரைச் சோ்ந்த முருகன் மகன் பெரியசாமி (27) என்பவா் ஓட்டி வந்த சுமை ஆட்டோ இந்த பைக் மீது மோதியதாம். இதில், மதன்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

சடலத்தை சின்னகோவிலாங்குளம் போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து பெரியசாமியைக் கைது செய்தனா்.

சுரண்டை பள்ளியில் அறிவியல் கண்காட்சி

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் ஆசிரியா்கள் மனிதச் சங்கிலி

தூத்துக்குடியில் முதல்வருக்கு வரவேற்பு

உடன்குடி ஒன்றியத்தில் கந்தசஷ்டி கவச பாராயணம்

தக்கலை அருகே விபத்து: ஓய்வுபெற்ற ஆசிரியா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT