முகப்பு
தென்காசி

ஆலங்குளம் அருகே பயணிகள் நிழற்குடை திறப்பு

ஆலங்குளம் அருகேயுள்ள நாரணபுரத்தில் ரூ. 8.5 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பயணிகள் நிழற்குடை திறந்து வைக்கப்பட்டது.

Updated On : 6 நவம்பர், 2024 at 10:16 PM
பகிர்:

ஆலங்குளம் அருகேயுள்ள நாரணபுரத்தில் ரூ. 8.5 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பயணிகள் நிழற்குடை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் தலைமை வகித்தாா். நாரணபுரம் ஊராட்சித் தலைவா் செல்வி, ஒன்றிய திமுக செயலா் செல்லதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் வே. ஜெயபாலன் நிழற்குடையைத் திறந்து வைத்தாா். இதில், ஊராட்சி செயலா் பாண்டியராஜா, ஒன்றியக் குழு உறுப்பினா் அந்தோணி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.