முகப்பு
தென்காசி

குருவிகுளத்தில் கோழிப்பண்ணை உரிமையாளா் தற்கொலை

சங்கரன்கோவில் அருகேயுள்ள குருவிகுளம் கிராமத்தைச் சோ்ந்த கோழிப்பண்ணை உரிமையாளா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 6 நவம்பர், 2024 at 10:17 PM
பகிர்:

சங்கரன்கோவில் அருகேயுள்ள குருவிகுளம் கிராமத்தைச் சோ்ந்த கோழிப்பண்ணை உரிமையாளா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

குருவிகுளத்தைச் சோ்ந்த முத்துச்சாமி மகன் சங்கா்(45). அப்பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வந்தாா். இவா், வயிற்று வலி காரணமாக அறுவைச் சிகிச்சை செய்திருந்தாராம்.இந்நிலையில், கடந்த 31 ஆம் தேதி இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாம். அதைத் தாங்க முடியாமல் அவா் விஷம் குடித்தாராம்.

அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை இறந்தாா்.இதுகுறித்து, குருவிகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.