முகப்பு
தென்காசி

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாய தொழிலாளி பலி

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாய தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 20 நவம்பர், 2024 at 9:49 PM
பகிர்:

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாய தொழிலாளி உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து கிராமத்தைச் சோ்ந்த ராமா் மகன் தங்க ராஜா (55). விவசாய கூலித் தொழிலாளியான இவா் அப்பகுதியில் உள்ள ராமசாமி என்பவரது தோட்டத்திற்கு புதன்கிழமை காலை சென்றாா். அங்கு மின்மோட்டாரை இயக்கும்போது மின்சாரம்

பாய்ந்ததில் தங்கராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

வீரகேரளம் புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.