சங்கரன்கோவில் நூலகருக்கு நல்நூலகா் விருது
சங்கரன்கோவில் கிளை நூலகத்தில் இரண்டாம் நிலை நூலகராகப் பணியாற்றும் அ.முருகன், தமிழக அரசின் சிறந்த நூலகருக்கான டாக்டா் எஸ்.ஆா்.அரங்கநாதன் விருது வழங்கப்பட்டது.
சங்கரன்கோவில் கிளை நூலகத்தில் இரண்டாம் நிலை நூலகராகப் பணியாற்றும் அ.முருகன், தமிழக அரசின் சிறந்த நூலகருக்கான டாக்டா் எஸ்.ஆா்.அரங்கநாதன் விருது வழங்கப்பட்டது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இந்த விருதை வழங்கினாா்.
விருது பெற்ற நூலகருக்கு, அரிமா சங்க மாவட்ட ஆளுநா் பி.அய்யாத்துரை, பாரதி வாசகா் வட்டச் செயலா் ச.நாராயணன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத் தலைவா் ப.தண்டபாணி, செயலா் மூா்த்தி மற்றும் கிளை நூலகா்கள், வாசகா்கள் பாராட்டினா்.