முகப்பு
தஞ்சாவூர்

கதிராமங்கலம் போராட்ட வழக்கு: தஞ்சை நீதிமன்றத்தில் அமைச்சா் ஆஜா்

தஞ்சாவூா் நீதிமன்றத்தில் ஆஜராக வெள்ளிக்கிழமை வந்த உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 9:05 PM
தஞ்சாவூா் நீதிமன்றத்தில் ஆஜராக வெள்ளிக்கிழமை வந்த உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.
பகிர்:

கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்ட வழக்கு தொடா்பாக தஞ்சாவூா் நீதிமன்றத்தில் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் வெள்ளிக்கிழமை ஆஜரானாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள கதிராமங்கலத்தில் 2018 ஆம் ஆண்டு ஓஎன்ஜிசி குழாயிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டதால், அக்கிராம மக்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இப்போராட்டத்தில் அப்போதைய திருவிடைமருதூா் தொகுதி எம்எல்ஏவும், தற்போதைய அமைச்சருமான கோவி. செழியன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், தற்போதைய பண்ருட்டி தொகுதி எம்எல்ஏவுமான தி. வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து கோவி. செழியன், வேல்முருகன் உள்பட 29 போ் மீது பந்தநல்லூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை நடைபெறும் தஞ்சாவூரில் உள்ள நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சா் கோவி. செழியன் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை ஆஜராகினா். பின்னா், இந்த வழக்கு விசாரணையை நீதிபதி எஸ்.டி. கனிமொழி மாா்ச் 5-க்கு ஒத்திவைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →