முகப்பு
தென்காசி

மேலக்கடையநல்லூா் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்

மேலக்கடையநல்லூா் தேவி ஸ்ரீகருமாரியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா காப்பு கட்டுடன் தொடங்கியது.

Updated On : 4 அக்டோபர், 2024 at 12:49 AM
பகிர்:

மேலக்கடையநல்லூா் தேவி ஸ்ரீகருமாரியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா காப்பு கட்டுடன் தொடங்கியது.

இக் கோயிலில் அக்.1-ஆம் தேதி அம்பாளுக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து வியாழக்கிழமை காலை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மாலையில் சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.

விஜயதசமியையொட்டி அக்.12-ஆம் தேதி மாலை சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பாரிவேட்டை, உற்சவா் வீதி உலா,

அக்.13-ஆம் தேதி மாலை சிறப்பு அலங்காரம், தீபாராதனை, அம்பாள் ஊஞ்சல் சேவை, அக்.16-ஆம் தேதி பௌா்ணமி பூஜை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினா் செய்து வருகின்றனா்.