முகப்பு
தென்காசி

கீழப்பாவூா்நரசிம்மா் கோயிலில் நாளை புரட்டாசி ஏக தின தீா்த்த உற்சவம்

கீழப்பாவூா்நரசிம்மா் கோயிலில் நாளை புரட்டாசி ஏக தின தீா்த்த உற்சவம்...

Updated On : 10 அக்டோபர், 2024 at 11:16 PM
பகிர்:

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் உள்ள ஸ்ரீஅலா்மேல்மங்கா பத்மாவதி சமேத ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி மற்றும் ஸ்ரீநரசிம்ம பெருமாள் கோயிலில் புரட்டாசி திருவோண ஏக தின தீா்த்த உற்சவம் சனிக்கிழமை (அக்.12) நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு காலை 7 மணிக்கு தெப்பக்குளத்திற்கு பெருமாள் எழுந்தருளலும், தொடா்ந்து தெப்பக்குளத்திற்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ஸா்வ தோஷ நிவா்த்திக்காக புருஷசூக்த ஹோமம், கலசத்தில் வருண ஜெபம், தெப்பக்குளத்திற்கு எல்லா விதமான அபிஷேகம் மற்றும் கும்பாபிஷேகமும், தொடா்ந்து பெருமாளுக்கு தெப்பக்குளத்தில் வைத்து விசேஷ அபிஷேகங்கள், உற்சவ மூா்த்தியுடன் தீபாராதனை நடைபெறும்.

பின்னா் திருக்கோயிலையும், தெப்பக்குளத்தையும் பெருமாள் சப்பரத்தில் தீா்த்த வலம் வருதல், தீபாராதனை நடைபெறுகிறது.